பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் முக்கியமான இடத்தைப் பெற்றவை — ஹேர் ஸ்ட்ரைட்டனர்கள், கர்லர்கள், ட்ரையர்கள் போன்ற ஹேர் ஸ்டைலிங் கருவிகள். இவை இன்று அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சிறப்பு நிகழ்வுகளிலும், ஸ்டைலான தோற்றத்திற்காகவும் பெரும்பாலானோர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த கருவிகளை கவனக்குறைவாகப் பயன்படுத்துவது பல சமயங்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதை நினைவூட்டும் வகையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெண்ணின் தலைமுடியில் ஹேர் ஸ்ட்ரைட்டனர் சிக்கிக் கொண்டிருப்பது காணப்படுகிறது. வலியால் அவள் அலற, அருகில் இருந்த இரண்டு பேர் அதை அகற்ற முயற்சிக்கிறார்கள். ஒருவர் கருவியைப் பிரிக்க முயற்சித்தும் பலனளிக்காததால், அவர்கள் அதை சுத்தியலால் உடைக்க தீர்மானிக்கிறார்கள்.
A woman’s hair gets stuck in a hair straightener rescuers destroy the device to save her hair,Has this ever happened to you😅 pic.twitter.com/vtubrX1b8X
— SilentOrbit (@silentblossom_) October 20, 2025
ஒரு ஆண் கவனமாக ஸ்ட்ரைட்டனரை துண்டுகளாக உடைத்து, பெண்ணின் முடியை சேதப்படுத்தாமல் இருக்க முயல்கிறார். அதே சமயம், அருகில் இருந்த மற்றொரு பெண், முடியை மெதுவாக அவிழ்த்து உதவுகிறார். வீடியோ முழுவதும் அந்த பெண் வலியால் துடிக்கிறாள், அருகிலிருந்தவர்கள் அவளை அமைதியாக இருக்குமாறு கூறுகிறார்கள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஸ்ட்ரைட்டனர் உடைக்கப்பட்டு, பெண்ணின் முடி பாதுகாப்பாக வெளியே வருகிறது. வீடியோவின் முடிவில், பார்வையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, மில்லியன் கணக்கான பார்வைகளையும் பகிர்வுகளையும் பெற்றுள்ளது. மேலும் பலர், “இது அழகு சாதனப் பொருட்களை கவனக்குறைவாகப் பயன்படுத்தும் விளைவு” எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.
