சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த பட்ஜெட்டில் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதியோர். விதவை, சமூக பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.1000 கிடையாது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி, வாரியங்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், கூட்டுறவு ஊழியர்களுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற ஊழியர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ.1000 கிடையாது.
