தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எங்களுக்கு விடிஞ்சு எந்திரிச்சா… ஆளுநர்  என்ன சொல்றாரு ? என்று அவருக்கு பதில் சொல்வதே பாதி வேலையா ஆயிடுச்சு. இந்த மாதிரி அனாவசியமான விஷயங்களில் ஆளுநர் குறுக்கீடு செய்வது மக்கள் பணிகளை செய்வதை தடை செய்வதை போன்ற ஒரு சூழ்நிலை அவர் ஏற்படுத்த பார்க்கிறார்.

அனால் அதற்கெல்லாம் எங்களுடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் பணியை செய்வதை யாரும் தடுக்க முடியாது. அமைச்சர்கள் எல்லோரும் தீவிரமாக பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கி கொண்டு இருக்கின்றார். எனவே நாங்கள் ஆளுநர் எந்தெந்த கடிதம் தந்தாலும், அதற்கு பதிலை தந்து கொண்டு…  அதே நேரத்தில் எங்களுடைய பணிகளையும் நாங்கள் முழுமையாக செய்து கொண்டிருக்கிறோம்.

ஆளுநர் கொடுத்த மூன்று விளக்கமும் தப்பு. இப்படி தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே வா இருக்கணும். ஆளுநர் பொய் சொன்னதை நாங்க பத்திரிகை அனைத்துக்கும் சொல்லி விடுவோம். ஆளுநர் வேறு வேலையில்லாமல்….  தமிழக அரசினுடைய பணிகளில்  குறுக்கிடுவது,  இந்த அரசை செயல்பட விடாமல் இருக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.

ஆளுநர் நினைக்கும் ஒன்றுமே நடக்காது. அவர் நினைப்பது எதுவுமே தமிழ்நாடு நடப்பக்காது என்பதை  கொள்கின்றேன். எத்தனை இடையூறு கொடுத்தாலும், தொந்தரவு கொடுத்தாலும்,  எங்கள் முதலமைச்சர் எதற்கும் அஞ்ச மாட்டார்,  சிறப்பாக தமிழ்நாட்டை வழி நடத்துவார் என தெரிவித்தார்.