இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு தற்போது கனமழையின் காரணமாக நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
அதாவது காங்ரா பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் செல்லும் போது திடீரென பாலத்தின் சுற்றி சுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த விபத்தும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கனமழையின் காரணமாகவே பாலத்தின் சுவர் இடிந்து விழுந்ததாகவும் தற்போது அந்த பாலத்தை மூடிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Train Narrowly Dodges Disaster in Himachal as Bridge Retaining Wall Collapses Amid Heavy Floodwaters
The locomotive – reportedly carrying hundreds of passengers – just managed to safely cross the Chakki River in the Kangra district of Himachal Pradesh before part of the bridge… pic.twitter.com/V69QXrwb3n
— RT_India (@RT_India_news) July 21, 2025
