பாலிவுட் நடிகர் ரிதுராஜ் சிங் (59) காலமானார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பால் ஈர்க்கப்பட்ட இவர் திங்கட்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிறகு திரை உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அப்னி பாத், ஜோதி, ஹிட்லர் திதி, வாரியர் ஹை, தியா அவர் பாத்தி போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் பிரபல நிதி நிறுவனம் மியூச்சுவல் ஃபண்ட் அதிகாரி கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.