நெதர்லாந்து நாட்டின் சொகுசு கப்பல் ஒன்று கேப் வெர்தே கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் பயணம் செய்த 147 பயணிகளில் சிலருக்கு ‘ஹண்டா’ எனப்படும் அரிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கப்பலில் உள்ள மற்ற பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று மற்றவர்களுக்கும் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் அமெரிக்காவில் கப்பல் பயணித்தபோது, பயணிகள் ஏறுவதற்கு முன்பே இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது சுகாதார அதிகாரிகள் கப்பலில் உள்ளவர்களின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.