சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு சிசிடிவி காட்சி, ஒரு பெண்ணின் கைவரிசையைக் கண்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரபரப்பான பஜார் வீதியில் அமைந்துள்ள ஒரு தெருவோரக் கடையில், பொம்மை வாங்குவது போல அந்தப் பெண் நயமாகப் பேசுகிறார். கடையின் உரிமையாளர் மற்ற வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்த அந்தச் சில நொடி இடைவெளியைப் பயன்படுத்தி, யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் ஒரு பொம்மையைத் திருடிவிட்டு அங்கிருந்து நழுவிச் செல்கிறார்.

​இந்தச் செயல் அனைத்தும் அங்கிருந்த கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. கடையின் உரிமையாளர் அசந்த நேரத்தில், மிக லாவகமாக அந்தப் பெண் திருடிய விதம் தற்போது எக்ஸ் (X) தளத்தில் பேசுபொருளாகியுள்ளது. “இவ்வளவு அசால்ட்டாகத் திருடுகிறாரே” என நெட்டிசன்கள் பலரும் இந்தக் காணொளியைப் பகிர்ந்து, கடைக்காரர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரித்து வருகின்றனர்.