தமிழக அரசியலில் தவெக-வின் வருகை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் திமுக-விலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த அவர், திமுக-வை விளாசித் தள்ளியுள்ளார். இத்தனை ஆண்டுகள் திமுக-வில் உழைத்த தனக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்பதே தனது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

​நேர்மையான ஆட்சியை வழங்கத் துடிக்கும் தவெக-வில் இணைந்து பணியாற்றவே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். திமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் இப்படித் தாவத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “உழைப்பவர்களுக்கு இடமில்லையா?” என்று கேள்வி எழுப்பிய சண்முகசுந்தரம், இனி தனது அரசியல் பயணம் தமிழக வெற்றிக் கழகத்தோடு தான் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.