தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அங்கன்வாடிகளின் 10 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊதிய உயர்வு மட்டும் வழங்க அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்கள் 11,500 தற்போது சம்பளம் பெற்று வரும் நிலையில் 15,500 ஆக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் தற்போதைக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் திட்டம் இல்லை என்றும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு ஜனவரி 5ஆம் தேதிக்குள் மீண்டும் அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.