கவரேஜ் எங்கெங்கு உள்ளன என்பது குறித்த வரைபடத்தை அக்டோபர் 1 முதல் இணையதளத்தில் வெளியிடும்படி பிராட்பேண்ட் சேவை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என தனியாக எங்கெங்கு தவறுகள் கவரேஜ் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தரமான மற்றும் வெளிப்படையான சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது