அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள 12 நாட்களில் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை பட்டியலின் படி, துர்கா பூஜை, தசரா மற்றும் பிற பண்டிகைகள் மற்றும் நாட்கள் காரணமாக வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கிக் கிளை மூடப்படும் போதெல்லாம், ஆன்லைன் வங்கி மூலம் உங்கள் வீட்டிலிருந்தே வங்கி தொடர்பான பணிகளைச் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் இன்னும் 15 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் அக்டோபர்ல் இன்னும் எட்டு வங்கி விடுமுறைகள் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.