NDA கூட்டணியினர் பிகாரை அடமானம் வைக்க விரும்புவதாகவும், வேலைவாய்ப்புகள் குறித்து பாஜக ஒருபோதும் கவலைப்பட்டதில்லை எனவும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். தேஜஸ்வியின் நிதி உதவிகள் உள்ளிட்ட வாக்குறுதிகளால் NDA கூட்டணி கட்சி பதற்றமடைந்துள்ளது. தேஜஸ்வி யாதவ் பெண்களுக்கு ₹2,500 நிதி உதவி உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார்.

இந்த வாக்குறுதிகள் NDA கூட்டணியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த முறை பிகார் மக்கள் தங்களது நலனுக்கான நல்லிணக்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.