இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் facebook பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பேஸ்புக்கில் உள்ள எந்த லிங்குகளையும் நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பொருட்களை வாங்குவதற்கு அதிகாரப்பூர்வ தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் லிங்குகள், செயலிகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். ஒருவேளை யாராவது சைபர் மோசடிக்கு ஆளாகி இருந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.