ஹர்திக் பாண்டியா அவுட் ஆனது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது..

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி சுப்மன் கில் (208) அதிரடி இரட்டை சதத்தால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டான போதிலும்  மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக சதம் விளாசினார். இருப்பினும் கடைசி ஓவரில் அவர் விக்கெட்டை விட்டார். இதனால் நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. இதனால் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்த போது 40 வது ஓவரை டேரில் மிட்செல் வீசினார். மிட்செல் வீசிய அந்த ஓவரின்  4வது பந்தில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் அந்த பந்தை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்ட போது அவரது பேட்டில் பந்து படாமல், அது நேராக ஸ்டெம்பின் மீது இருந்த பெய்ல்சுக்கு நெருக்கமாக வந்தது. அதனை விக்கெட் கீப்பர் டாம் லேதம் கையுறையை பெல்ஸுக்கு நெருக்கமாக வந்து பிடிக்க முயன்றார். பந்து அதனை கடந்து சென்ற போது பெய்ல்ஸ் சரிந்து விழுந்தது. ஆனால் டிவி ரிவியூவில் பார்க்கும் போது பந்து பெய்ல்ஸ் மீது பட்டதாகவே தெரியவில்லை.

கீப்பரின் கையுறை பட்டதால் தான் அது கீழே விழுந்ததாக தெளிவாக தெரிந்தது. ஆனால் மூன்றாவது அம்பயர் அதற்கு அவுட்டு கொடுத்து விட்டார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும்  அதிர்ச்சிக்குள்ளாகினர். சக இந்திய வீரர்களுமே சற்று திகைத்துப் போயினர். ஹர்திக் பாண்டியாவும் அதிருப்தியுடன் வெளியேறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது நாட் அவுட் என்று கூறி அம்பெயரை விமர்சித்து வருகின்றனர்..

https://twitter.com/MrsProudIndians/status/1615670017999384577