மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்ற பகுதியில் ஒரு கூலி தொழிலாளி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் பெண் தரகர் ஒருவர் ஆக்ராவில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை வார்த்தை கூறி தன்னுடைய ஆண் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ஆக்ராவுக்கு கூலி தொழிலாளி பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கூலி தொழிலாளி பெண்ணை விற்பனை செய்யலாம் என்று அவர்கள் திட்டமிட்ட நிலையில் அவர்களுடைய திட்டம் பலிக்கவில்லை.

இதனால அந்த கூலி தொழிலாளி பெண்ணின் குழந்தையை ஹரியானாவில் உள்ள குரு கிராம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த கூலி தொழிலாளி பெண்ணை ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அடைத்து வைத்து 10 நாட்களாக 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் ஆக்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு பெண் தரகர்  உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். அதோடு பெண்ணின் குழந்தையை குரு கிராம் காவல்துறையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.