பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூபாய்.19,744 கோடி ஆரம்பகட்ட மதிப்பீலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைக்கும் நோக்கத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்குரிய ஊக்கத் தொகை திட்டமாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பசுமை ஹைட்ரஜன் அதன் துணை பொருள்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாக கொண்டு இத்திட்டத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது” என்று தெரிவித்தார்.