விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை அம்பேத்கர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மகேஸ்வரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் ராமலட்சுமி அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவநாளில் ராமலட்சுமி வேலைக்கு சென்று விட்டு வழக்கம் போல் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கணவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது மகேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கினார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அழைத்து சென்றார். ஆனால் அங்கு ஏற்கனவே மகேஸ்வரன் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.