கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போதா புறம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார் இவர் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். குடும்பத்தினரும் வெளியே சென்றுவிட்டனர். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தனலட்சுமி பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தனலட்சுமி காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கபாதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.