சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான R. வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோபாலபுரம் கதிட்ரல் சாலையில் பெரிய அளவிலான கிரானைட் நிறுவனத்தை நடத்தி வரும் இவர், பல முன்னணி அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிப் பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அதனை வீடியோவாகப் பதிவு செய்து அதைக் காட்டிச் சிறுமியை மிரட்டியதாகவும் இவர் மீது பகீர் புகார்கள் எழுந்துள்ளன. இந்தத் புகாரின் அடிப்படையில் உறுதியான ஆதாரங்களுடன், ஜாமினில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளின் கீழ் R. வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி என்ற பெண்ணும் காவல்துறையினரால் இவருடன் சேர்த்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“>

 

தொழிலதிபர் ஒருவர் இது போன்ற பாலியல் குற்றத்தில் கைதாகியுள்ள நிகழ்வு தமிழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.