பாதுகாப்பை மீறி 20 கோடி டுவிட்டர் பயனர்களின் மின் அஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களை ஹேக்கர்கள் ஹேக் செய்திருப்பதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறி உள்ளார். ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ள தரவுகளில் விராட்கோலி, சல்மான் கான் மற்றும் பிற பிரபலங்கள் அடங்குவர். ஹேக் செய்துள்ள தகவல்களை ஹேக்கர் குழுமத்தில் மர்ம நபர்கள் வெளியிட்டு உள்ளனர்.

இத்தகவல் வெளியானதை அடுத்து டுவிட்டர் பயனாளர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். டுவிட்டர் பயனர்களின் தரவுகள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படும் இவ்விவகாரத்தில் தற்போது வரை டுவிட்டர் நிர்வாகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனிடையில் எலான் மஸ்க் டுவிட்டரை கையகப்படுத்தப்படுவதற்கு முன்பே இத்தரவுகள் திருடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.