குறைவான கட்டணம், நம்பகமான சிறந்த கல்விமுறை போன்றவற்றை உறுதி செய்யும் மருத்துவக் கல்வி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். இந்தியாவில் உள்ள 150 தனியாா் மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சா் கலந்துரையாடினாா். இந்நிலையில் தங்களது கருத்துகள், பரிந்துரைகள் ஆகியவற்றை கல்லூரி பிரதிநிதிகள் முன் வைத்தனா்.

அந்த கூட்டத்தில் அமைச்சா் பேசியிருப்பதாவது “நாட்டில் ஆற்றல் மிக்க மருத்துவக்கல்வித் துறையை உருவாக்குவதில் பங்காற்ற தனியாா் மருவத்துவக் கல்லூரிகள் முன் வர வேண்டும். நம் நாட்டின் அற நெறிகளில் ஆழமாக வேரூன்றிய சேவை எனும் விழுமியத்தில் இருந்து விலகி இப்போது மருத்துவக்கல்வி வணிகமயமாக மாறி உள்ளது. குறைந்த கட்டணம், நம்பகமான சிறந்த கல்விமுறை போன்றவற்றை உறுதி செய்யும் மருத்துவக் கல்வி கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நாட்டில் மருத்துவம் எப்போதும் சேவையாக கருதப்படுகிறது. இந்தியாவுக்கு என மருத்துவக் கல்வி முறையை உருவாக்க வேண்டியுள்ளது” என்று பேசினார்.