மத்திய அரசு நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடும் சட்ட திட்டங்களை விதித்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு கவன குறைவு, காலதாமதம், பணி நேரத்தில் இருக்கையில் அமர்ந்து தூங்குதல், பணி நேரத்தில் செல்போன் பார்ப்பது, கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது, படம் பார்ப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஊழியர்கள் கட்டாயம் ஈடுபடக்கூடாது.

ஒருவேளை மேற்கண்ட ஒழுங்கீன செயல்களின் ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு கொடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களை தனியாக கவனிக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த புதிய சட்ட திட்டங்கள் நாடாளுமன்ற ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.