மகாராஷ்டிரா மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி சென்ற 2020ம் வருடம் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது ஒரு தெரு நாய் திடீரென்று குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் அது மீது மோதியுள்ளது. இவ்விபத்தில் நாய் காயமடைந்ததை அடுத்து, பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திய மனாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதன்படி காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 279 உட்பட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து மனாஸ் அந்த புகாரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குப்பதிவு நியாயமற்றது என்று ரத்து செய்ததோடு, பாதிக்கபட்ட மனாஸ்க்கு வழக்கு செலவாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.