ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் கட்சி பலி கொடுக்கப்படுகிறது என்று காரசாரமான வாதங்களாக ஓபிஎஸ் இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்தார். அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருவது வருகிறது. இன்றைய தினம் மூன்றாவது நாளாக வழக்கின் வாதங்கள் என்பது நடைபெற்றது. ஓபிஎஸ் தரப்பில் தான் இன்றைக்கும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பின் வாதம் இன்றைய தினம் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தது என்னவென்றால், தனிப்பட்ட ஒரு நபருக்காக கட்சி விதிகள் மாற்றப்பட்டிருக்கிறது. எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்தபோது அப்போது திமுகவில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் தான் வெளியேற்றப்பட்டார். நியாயமாக தொண்டர்கள் மூலமாக அவர் வெளியேற்றப்பட்டு இருந்தால் அவர் நிம்மதி அடைந்திருப்பார். ஆனால் மாறாக அது நடந்ததால் தான் தனியாக கட்சி தொடங்கினார். அதற்கு பிறகு தனக்கு ஏற்பட்டது போன்ற எந்த கசப்பான சம்பவமும் அதிமுகவில் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் அடிப்படை உறுப்பினர்களுக்கான அதிகாரத்தை அவர் கொடுத்திருந்தார்.

முக்கிய முடிவுகள் அனைத்தையும் அடிப்படை உறுப்பினர்களால் எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் கட்சி விதிமுறைகளை உருவாக்கினார். சில முக்கிய விதிகளை எப்போது மாற்றி அமைக்க கூடாது என எம்ஜிஆர் விரும்பினார். கட்சி விதிகளை எல்லாம் அவசர கதியில் பழனிசாமி தரப்பினர் மாற்றி உள்ளனர். அதிமுகவின் அடிப்படை நோக்கமே மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டிற்கு மாறாக அதிமுகவில் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் என்னை நீக்கி உள்ளனர் என்ற வாதத்தினை ஓபிஎஸ் முன்வைத்தார்.

அதுவும் நான் 3 முறை முதல்வராக இருந்திருக்கிறேன். கட்சியின் தலைமை எனக்கு 3 முறை முதல்வர் பதவி கொடுத்தது. பிறகு தேவைப்படும்போது அந்த பதவியை நான் திரும்ப கொடுத்திருக்கிறேன். இக்கட்டான சூழலில் முன்னணியில் நின்று கட்சிக்காக போராடி இருக்கிறேன். அதிமுகவின் பொருளாளர் பதவி வகித்து வருகிறேன். மூத்த தலைவராகவும் இருக்கிறேன். அப்படி இருக்கும் என்னை சில அற்ப காரணங்களுக்காக சொல்லி அவர்கள் வெளியேற்றியுள்ளனர். இது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குத்தான் உள்ளது.

திடீரென ஒருவர் மைக் முன்பு வந்து தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறி அதை பொதுக்குழு ஏற்றதாக அறிவிக்கிறார்கள். தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறி அதை பொதுக்குழு ஏற்றதாக அறிவித்தது அதிகார துஷ்பிரயோகம். அதிமுகவில் இப்போது தேர்தல் நடந்தாலும் கூட நான் தான் வெற்றி பெற்று ஒற்றை தலைமையில் அமர்வேன். உண்மையில் தேர்தல் நடந்தால் இந்த நேரத்திலும் கூட நான்தான் இவர்கள் சொல்வதைப் போன்ற ஒற்றை தலைமையை ஏற்கக்கூடிய தகுதியுடன் இருப்பேன். ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் கட்சி பலி கொடுக்கப்படுகிறது என்று காரசாரமான வாதங்களாக ஓபிஎஸ் இன்றைய தினம் முன் வைத்தார். உச்சநீதிமன்றம் வளாகத்தில் அந்த அளவிற்கு அனல் அடிக்கக்கூடிய வாதங்களாக தான் இருந்திருந்தது.

கடைசியாக வாதம் என்பது நிறைவடைந்துள்ளது. இன்றைய தினமே 2 தரப்பு வாதமும் நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில், நீண்ட நேரமாக ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் என்பது சென்றது. இன்னும் சொல்லப்போனால்  உணவு இடைவேளை கூட விடப்படாமல் விசாரணை நடந்தது. வழக்கானது செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தரப்பு, அதிமுக தலைமை அலுவலகம், அதிமுக பொது குழு ஆகிய 3 தரப்பினர்கள் வாதங்களை அடுத்தடுத்த அரை மணி நேரம் என்று ரீதியில் வைக்கப்பட இருக்கிறது. அன்றைய தினம் நேரம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஏராளமான வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது நேரம் சரி பார்த்து நாங்கள் உங்களுக்கு கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே செவ்வாய்க்கிழமையும் வழக்கின் வாதங்கள் நிறைவடையுமா என்பது கேள்விக்குறியான விஷயமாக இருந்தாலும் கூட வழக்கு குறிப்பிட்ட தேதியை சொல்லி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.