உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசி பகுதியில் சரிதா என்ற பெண் கான்வென்ட் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த காணொளியில் சரிதா தனது வயதான மாமனாரை கொடுமையாக தாக்குவது பதிவாகியுள்ளது. வீட்டில் வயதான ஒருவரிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ளும் சரிதா எவ்வாறு பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பார் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த காணொளியை பகிர்ந்த National Council for Men Affairs (NCMIndia) அமைப்பு சரிதாவின் வயதான மாமனாரை சந்தித்து அவர் நலமுடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் வயதான ஒருவரை கொடூரமாக தாக்கிய சரிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.