மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது அன்னா செபாஸ்டியன், பணிச்சுமை காரணமாக உயிரிழந்தார். இதன் பின்னணியில், பணியின் வரையறையற்ற கால அளவுகள் மற்றும் அதிகரித்த பணிச்சுமை காரணமாக இளைஞர்கள் உடல், மன அழுத்தத்திற்கு ஆளாகும் கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்த விஷயம் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்ததிலும் சர்ச்சை எழுந்தது. சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய நிர்மலா, வேலை நெருக்கடிகளை தாங்கிக்கொள்ள ஆன்மீக சக்தி தேவையாகும் என்று கூறியுள்ளார். மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கடவுளை நம்புங்கள் என்று சொல்லி வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் பலரின் எதிர்ப்பை சந்தித்துள்ளது. தொழில்நுட்ப உலகின் பணிச்சுமையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்ற போது தெய்வத்தின் மூலமாக உதவியை எதிர்பார்க்கின்றனர்.