இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் வேலையற்ற இளைஞர்கள் வரை அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஏழைகளுக்கு உதவும் வகையில் ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும்.

இந்த அட்டையில் இரண்டு லட்சம் இலவச விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டின் கீழ் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்களின் திடீர் மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த பணத்தை பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற ஆதார் அட்டை இணைப்பது கட்டாயம். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://pmjdy.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும்.