தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக தமிழக அரசு ரேஷன் கடை வாயிலாக பரிசு தொகுப்புகளை வழங்கி வந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி-16) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளித்து உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன,.16) ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும். இதற்கு மாற்றாக 27 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஜனவரி 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது இன்றைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.