தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை உலக மக்களிடம் கொண்டு செல்லும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியாக சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடந்து வருகிறது. வெளி நாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழாவானது, இந்த முறை தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பாக நடந்து வருகிறது. இவற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், ஸ்பெயின், வியட்நாம், பிரான்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ராட்சத வெப்பக்காற்று பலூன்கள் கொண்டுவரப்பட்டு இங்கே பறக்க விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏலகிரி, இராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழா இம்முறை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்றார்.