விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஆலை உரிமையாளர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து ஒப்பந்ததாரர் ஆறுமுகத்தை ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.