ஏழாயிரத்து நானூற்று ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில் தற்போது உலகத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறித்த தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை 97.2% 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்து வந்த 3.56 லட்சம் கோடி ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் நேற்று முன்தினத்துடன் 7,409 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.