மகாராஷ்டிரா மாநிலத்தில் விசித்திரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது வாஷிம் என்ற மாவட்டத்தில் 1.5 லட்சம் மதிப்புள்ள மங்கள் சூத்திரத்தை எருமை ஒன்று விழுங்கியது. அந்த மாவட்டத்தில் உள்ள சர்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராம்ஹரி என்ற விவசாயியின் மனைவி குளிப்பதற்கு முன்பு தன்னுடைய தாலியை எடுத்து எங்கோ வைத்திருந்தார். அதனை அவர்களின் எருமை விழுங்கியுள்ளது. கால்நடை மருத்துவர்கள் எருமையின் வயிற்றை வெட்டி தாலியை பிரித்து எடுத்தனர். அந்த தாலியை வெளியே எடுத்த பிறகு அந்த எருமைக்கு 65 தையல்கள் போடப்பட்டது.