கரூர் மாவட்டத்தில் ‌ வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் இவர்கள் வீட்டில் இருந்து காலை நீண்ட நேரமாக யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கல்பனா மற்றும் குழந்தை இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

உடனடியாக அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது செல்வகணேஷ் பூச்சி மருந்தை குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்க தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. உயிரிழந்த கல்பனா மற்றும் குழந்தையின் சடலம் மீட்க பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்பத் தகராறால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. அதாவது கணவன் மனைவிக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை என்பது இருந்த நிலையில் சம்பவ நாளிலும் பிரச்சனை வந்ததால் கோபத்தில் செல்வகணேஷ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரும் பின்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் என்பதில் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.