முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்புடைய பாலியல் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்தாண்டு ஜுன் 16ஆம் தேதி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதை எதிர்த்து ராஜேஷ்தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 9ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இன்று தீர்ப்பு வழங்கவுள்ளார்.