தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடித்திருக்கும் படம் “வாத்தி”. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் வாத்தியாராக நடித்து உள்ளார். இதன் சூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே டிசம்பர் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் என சொன்னார்கள். அதன்பின் வாத்தி பிப்ரவரி  17ல் ரிலீஸ் என அறிவித்தனர். எனினும் தற்போது அந்த தேதியிலும் படம் வெளியாகாது என்று கூறுகிறார்கள். அதாவது, ஏப்ரல் (அ) மே மாதத்தில் தான் படம் வெளியாகும் என்று சொல்கின்றனர். ஆகவே ரிலீஸ் தேதி மாற்றத்துடன் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.