தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.