
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் டிக்கி. இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை காமெடியாக கலந்து வெளியிடுவார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் இவர் பிரபலமானார். இவருக்கு திருமணம் ஆகி தேவிகா ஸ்ரீ என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு தன் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க ராகுல் பைக்கில் சென்றுள்ளார். இவர் கவுந்தப்பாடி பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருடைய இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது.
அவருடைய பைக் பாலத்தின் நடுவே இருந்த சென்டர் மீடியினில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராகுல் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் அவர் தற்போது விபத்தில் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.