உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் கொடுத்து அசத்தியுள்ளது. அதாவது சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் ஹெனன் மைன்‌ என்ற ஒரு பிரபலமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரித்து எத்தியோப்பியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல முன்னணி நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை காரணமாக பல நிறுவனங்கள் நெருக்கடியில் இருக்கும் நிலையில் சீனாவைச் சேர்ந்த ஹெனன் பைன் நிறுவனம் கடந்த வருடம் 23 சதவீதம் வருவாயை அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதன் காரணமாக தன்னுடைய ஊழியர்களை மகிழ்விப்பதற்காக அந்த நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 72.48 கோடியை மலைபோல் குவித்து வைத்து ஊழியர்களை அசர வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தன்னுடைய தீவிர பங்களிப்பை கொடுத்த மூன்று சேல்ஸ் மேன்களுக்கு தலா 6 கோடி போனஸும், மீதமுள்ள ஊழியர்களுக்கு சுமார் ஒரு மில்லியன் யுவானும் கொடுத்து அசர வைத்துள்ளது. மேலும் பணத்தை மலை போல் அந்த நிறுவனம் குவித்து வைத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.