கிழக்கு ஐரோப்பாவில் மால்டோவா என்ற நாடு  அமைந்துள்ளது. இங்குள்ள உஸ்டியா கிராமத்தில் 74 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கு கொலையில்  தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வாலிபர் வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவர் மது போதையில் மயங்கி கிடந்தார். அப்போது முதியவர் ஒருவரின் சத்தம் கேட்டது.

இதைத்தொடர்ந்து மண்ணுக்குள் அவர்கள் தோண்டி பார்த்தபோது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது வாலிபரும் அவரும் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் அவரை வாலிபர் தாக்கியுள்ளார். அப்போது முதியவர் மயக்கம் அடையவே அவரை வீட்டின் பின்புறம் உள்ள கீழ்தளத்தில் வைத்து பூட்டிவிட்டு அதன் மேல் மண்ணை போட்டு மூடியுள்ளார். இந்நிலையில் முதியவர் புதைக்கப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் அவர் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இளைஞரை வாலிபர் கைது செய்த நிலையில் அவர்களுடைய பெயர் விவரங்களை வெளியிடவில்லை. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.