வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதன் படி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர், தர்மபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ,நாகை, மயிலாடுதுறை , தேனி , மதுரை சிவகங்கை, விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தென்காசி , தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.