திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்றில்  2 பெண்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கண்காணிப்பதற்காக 2 பெண்களை வீட்டிற்கு வெளியே  நிற்க வைத்துவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளே சென்றனர். இந்நிலையில் பக்கத்து நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து வருவதை பார்த்த, காவலுக்கு நின்ற இரு பெண்களும் ஆள் வருவதாக சிக்னல் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த அந்த இரு பெண்களையும் வாலிபர் மறித்து, நீங்கள் யார்? எப்படி வீட்டிற்குள் வந்தீர்கள் என விசாரித்துள்ளார். உடனடியாக அந்த இரு பெண்களும் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை களைந்து அந்த வாலிபரின் முன்னால் அரை நிர்வாணமாக நின்றனர்.  இவ்வாறு அவரின் கவனத்தை திசை திருப்ப முயன்றதாக கூறப்படுகிறது.  அந்த சமயம்  வீட்டின் உரிமையாளர் வந்ததால், உஷாரான பெண்கள்  தங்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். உடனேடியாக வீட்டின் உரிமையாளர்  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில்     இரண்டு பெண்களும்  சேலத்தைச் சேர்ந்த பார்வதி மற்றும் சித்ரா என்பது தெரிய வந்தது. இருவரும்  தீரன் படத்தில் வருவது போல பகல் நேரத்தில் யாரும் இல்லாத வீடுகளை கண்காணித்து, இரவில் திருடுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும்  கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும்  தப்பியோடிய  2 பெண்களை தீவிரமாக  தேடி வருகின்றனர்.