இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக மக்கள் மத்தியில் அரசு தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரை சேர்ந்த ஏஎஸ் வத்சலா என்ற பெண்ணிடம் போலி முதலீட்டு திட்டத்தின் மூலமாக 2.01 கோடி ரூபாய் வரை சைபர் குற்றவாளிகள் மோசடி செய்துள்ளனர். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் என்று கூறிய ஆசாமிகள் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை போலி வர்த்தக கணக்குகளை காண்பித்து அந்த பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளனர். இறுதியாக மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றவாளிகள் தற்போது தேடப்பட்டு வருகிறார்கள்.