செல்போன் சார்ஜ் போடும்பொழுது பலரும் தவறுகளை செய்கிறார்கள். பெரும்பாலான நபர்களுக்கு செல்போனை எவ்வாறு சார்ஜ் போட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறது. போனை திரும்பத் திரும்ப சார்ஜ் போடுவது பிரச்சினையை ஏற்படுத்தும். பேட்டரி சார்ஜ் குறையக்கூடாது என்பதற்காக நாம் அடிக்கடி சார்ஜ் போடுவது தவறாகும். பேட்டரி நீண்ட நாட்கள் வரவேண்டும் என்றால் அதை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது 20% செல்போனை சார்ஜ் இருந்தால் 80 அல்லது 90% வந்த பிறகு சார்ஜ்ல இருந்து எடுத்து விட வேண்டும்.

0 சதவீதத்தில் இருந்து சார்ஜ் போட்டாலோ, 80 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் போட்டாலோ  செல்போன் சூடாகி வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம் என்று நினைத்தால் பாதி அளவு சார்ஜ் போடுவது சிறந்தது. செல்போனை குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் தான் வைக்க வேண்டும். குளியல் அறையில் செல்போனை கொண்டு சென்றால் அங்கிருக்கும் ஈரப்பதத்திற்கு ஷார்ட் சர்க்யூட் ஆகி தீப்பற்ற ஆரம்பிக்கும். அதுபோல போலியான சார்ஜரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.