திராட்சைப்பழத்தில் பச்சை, கருப்பு, பன்னீர் என பல வகைகள் உண்டு. திராட்சை பழம் பலருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும். ஆன்டிஆக்சிடென்ட், விட்டமின்ஸ், மினரல்கள் நிறைந்த திராட்சைப்பழம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். திராட்சை பழத்தால் நன்மைகள் அதிகம் இருந்தாலும் சில உடல் நல பாதிப்பு கொண்டவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

அதன்படி திராட்சை பழத்தில் சேலிசிலிக் ஆசிட் உள்ளது. இதனால் செரிமானம் பிரச்சனை இருப்பவர்களுக்கு திராட்சை பழம் சாப்பிடுவதால் மேலும் பிரச்சினை அதிகரிக்கலாம்.

அடி வயிற்று வலி, வயிற்று மந்தம், வாயு பிரச்சனை மாதிரியான சிக்கல்களை சேலிசிலிக் ஆசிட் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் ஏற்கனவே வயிற்றுப் பிரச்சனை இருப்பவர்கள் திராட்சை பழத்தை தவிர்ப்பது நல்லது.

இயற்கையாகவே சர்க்கரை அளவு அதிகம் இருக்கும் திராட்சையில் கலோரி அதிகம் அதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருபவர்களும் திராட்சை பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

6 முதல் 12 மாத குழந்தைகளுக்கு திராட்சைப்பழம் கொடுத்தால் மூச்சு திணறல் ஏற்படும் என்பதால் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வாமை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் திராட்சைப்பழம் சாப்பிடுவதால் சரும அரிப்பு, எரிச்சல் போன்றவை வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் திராட்சை பழத்தை தவிர்க்கவும்.

கிட்னி கல் மற்றும் கிட்னி சார்ந்த பிற பிரச்சனைகள் கொண்டவர்களும் திராட்சை பழத்தை தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் பரிந்துரை.

இருமல், தலைவலி வாய் வறட்சி இருக்கும்போது திராட்சை பழம் சாப்பிட்டால் சளி அதிகமாகும் என்பதால் தவிர்ப்பது நல்லது என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாகும்.