பொதுவாக நாம் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பொருள்களை தூக்கிக்கொண்டு அலைய சங்கடப்பட்டு பொருட்களின் அளவை குறைத்து வெறும் செல்போனுடன் மட்டுமே செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது பணத்தை கைகளில் வைத்திருக்கும் போன் கவர் பின்னால் வைத்துக்கொண்டு செல்வோம். ஆனால் அப்படி பேப்பரையோ அல்லது பணத்தையோ போனுக்கு பின்னால் வைப்பது ஆபத்து என்பது தெரியுமா? ஏனெனில் செல்போன்கள் தீப்பிடிப்பது அல்லது வெடிப்பது போன்றது இப்போது சகஜமாகிவிட்டது. இதற்கு காரணம் நாம்   கவனக்குறைவாக இருப்பது தான்.

போன் அதிகமாக வெப்பமடையும் பொழுது இது போன்ற பிரச்சினை ஏற்படலாம். ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் தொலைபேசியில் அதிகப்படியான பயன்பாடு அல்லது தவறாக பயன்படுத்துவதன் காரணமாகவே இருக்கலாம். செல்போன் பேட்டரியில் அதிக அழுத்தம் இருக்கும் பொழுது அல்லது அதன் செயலியினாலோ தீ பிடிக்கிறது. அது மட்டும் இல்லாமல் தவறான வகை போன் கவராலும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போன் கவரில் எறியக்கூடிய பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் அதன் செயலி அதிக வெப்பம் அடைந்தால் தீ பிடிக்கக்கூடும். எனவே செல்போன் அட்டையில் எதையும் வைக்காமல் இருக்க முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.