கர்நாடகா மாநிலத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ளும் அடிப்படையில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி யாத்திரை மேற்கொண்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் யாத்திரை நடந்தது. யாத்திரையின் ஒரு பகுதியாக, கர்நாடக மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களையும், தேர்தல் வெற்றிக்குப் பின் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் திட்டங்களையும் டி.கே.சிவகுமார் பட்டியலிட்டார்.

அம்மாநிலத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், வேலையின்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரமானது இலவசமாக வழங்கப்படும். தேர்தலின் முதல் வாக்குறுதியாக இதை தெரிவிக்கிறோம். பா.ஜ.க அரசு 10 மணி நேரத்திற்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதாக அறிவித்தது. எனினும் அதனை செய்ததா?.. கடந்த முறை நாங்கள் ஆட்சியில் இருந்த போது 7 மணி நேரத்துக்கு இலவச மின்சாரம் வழங்கினோம் என குறிப்பிட்டார்.