காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சென்ற 4 ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியிலுள்ள கங்கா ராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சையளித்து வந்தனர்.

அதன்பின் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருக்கிறது எனவும் மெல்ல மெல்ல அவர் குணமடைந்து வருகிறார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அவர் நேற்று (ஜன,.10) மாலை 3 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் தகவல் தெரிவித்து உள்ளார்.