தமிழகத்தில் மூன்றாம் தவணை போலியோ தடுப்பூசி வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களுக்குள் மூன்றாம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும். குழந்தைகளின் தகுதியின் அடிப்படையில் மூன்றாம் தவணை போலியோ தடுப்பூசி வழங்கும் படி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.