கல்கத்தாவில் கடந்த ஆண்டு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மைனர் பெண்ணும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததால் இது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அந்த வாலிபர் விடுவிக்கப்பட்டார். அதோடு பெண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள பாலியல் இச்சைகளை அடக்கி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
2 நிமிடம் பாலியல் இச்சைக்காக தன்னிலை மறக்கும் பெண்கள் சமுதாயத்தின் பார்வையில் தோல்வி அடைந்தவர்களாகவே தெரிகின்றனர் என்று அறிவுரை கூறினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து அந்த வாலிபனை குற்றவாளி என்று அறிவித்தது. மேலும் இது போன்ற சிக்கலான வழக்குகளை எப்படி கையாளுவது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அறிவுரை வழங்கினார்.