இந்தியாவில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் சுய தொழில் தொடங்கும் பெண்களுக்காக அரசு சார்பில் குறைந்த வட்டியில் கடன் உதவியும் மானியத்தில் கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி பெண்களுக்கான உத்யோகினி திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு மூன்று லட்சம் ரூபாய் கடன் வழங்குகின்றது. இதன் மூலமாக பெண்கள் தொழில் நிறுவனங்களை நிறுவி பொருளாதார ரீதியாக நிலை பெற முடியும். கர்நாடக அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. ஊனமுற்றோர், விதவைகள் மற்றும் தலித் பெண்களுக்கு இந்த கடனுக்கு வட்டி இல்லை. மீதமுள்ள 18 முதல் 55 வயதுடைய பெண்களுக்கு பத்து முதல் 12 சதவீதம் வட்டி வழங்கப்படும். இதற்காக உள்ளூர் வங்கிகளை அணுகலாம்.